பளபளக்கும் பப்பாளியில் இவ்வளவு பயன்களா!! இது தெரியாம போச்சே!! 

Are there so many benefits to papaya?

பப்பாளி பழம் மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது.

*வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயத்தில் பப்பாளி பழம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

*பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரக கல் முற்றிலும் கரையும் தன்னைக் கொண்டது.

* மாலைக்கண் நோய் வந்தவர்கள் பப்பாளி பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.

*பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

* உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பப்பாளி ஜூஸ் பயன்படுத்தலாம் உடல் எடை குறையும்.
* பப்பாளி பழத்தை வெண்குஷ்ட நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் வெண் குஷ்ட நோய் குணமடையும்.

* முகப்பொலிவு வேண்டுமென்றால் பப்பாளி பழத்தை முகத்தில் தடவி ஊறவைத்து குளிர்ச்சியான நீரில் கழுவி வர வேண்டும்.
இவ்வாறு கழுவி வந்தால் கரும்புள்ளிகளும் சுருக்கங்களும் முகத்தில் இருந்து மறையும். முகம் பொலிவாக காணப்படும்.

*பப்பாளியை பப்பாளி காயை வெட்டும்போது வரும் பால் விளக்கெண்ணையை சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சி வெளியேறும்.
* பப்பாளிக்காயை அறுக்கும் போது வரும் பாலை பல்லில் வலி ஏற்படும் இடத்தில் வைத்து தடவினால் சிறிது நேரத்தில் ரத்தமும் சீலும் வெளிவரும் பிறகு பல்வலி சரியாகும்.

* தாய்ப்பால் அதிக அளவில் சுரப்பதற்கு பப்பாளி காயை சமைத்து சாப்பிடலாம்.
*மாதவிலக்கு கோளாறுகள் ஏற்படும் பெண்கள் பப்பாளி பழத்தை செங்காயாக இருக்கும் பருவத்தில் சாப்பிட்டு வரலாம்.
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி பழத்தை தினமும் சாப்பிடலாம்.

*பப்பாளி பழம் மட்டுமல்லாமல் பப்பாளி விதையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம் இவ்வாறு குடிப்பதால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
*பித்தம் அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி பப்பாளித்தை சாப்பிடலாம். இயற்கையாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் இவ்வாறான மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது கிடைக்கும் நேரத்தில் பப்பாளியை சாப்பிடலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram