கரு வளர்ச்சி சேரியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி கோவில்.
நாடுங்கும் பெண்களுக்கு குழந்தை பேரு விஷயத்தில் இயற்கையாகவும் மருத்துவமும் செயலாற்றும் போதும் இறைவன் நம்பிக்கைதான் ஒரே வழி என்றும் பலர் நம்புகின்றனர். புத்திர பாக்கியம் அளிக்கும் புண்ணிய தளங்களில் ஒன்றுதான் கரு வளர்ச்சி சேரி.
இங்கு சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியை கண்டனர் ஞானதிஷ்டியில் அன்னை மகப்பேறு அருளும் மாதேவி என்பதை ஒருவர் உணர்ந்தார் அகிலாண்டேஸ்வரி சாமி கோவிலில் சிறிய அழகான ஆலய கோபுரமும் கோபுர நுழைவாயிலுக்கு வலது புறம் மாப்பிள்ளை விநாயகரும் இடது புறத்தில் பால தண்டாயுதபாணியும் உள்ளனர்.
ஆலயத்தில் உள்ளே நுழைந்தவுடன் நேர் எதிரில் அகத்தீஸ்வரரின் கருவறை உள்ளது நந்தி தேவரும் மற்றும் பலி பீடமும் உள்ளது. கருவறையில் அகத்தியரால் வழிபடப்பட்ட அகத்தீஸ்வரரின் தீப ஒளியில் பித்தளை நாக்குடையின் நிழலில் சிறு லிங்க வடிவில் காவிக்கரை வேட்டியுடன் எளிமையான திருக்கோளத்தில் நமக்கு தரிசனம் அளிக்கிறார். குழந்தை பேரு வேண்டுதலுக்காக வருபவர்கள் எடுத்து வர வேண்டிய பொருட்கள் சாம்பிராணி தைலம்,சுத்தமான பசு நெய், எலுமிச்சம் பழம் ஏழு உருண்டை மஞ்சள் கொண்டு வர வேண்டும். முன்னாலையே தகவல் தெரிவித்துவிட்டு ஆலயத்திற்கு வந்தாள் அர்ச்சகர்களே ஏற்பாடு செய்யலாம்.
வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் அன்னையின் சன்னதி வாசலை நெய்யால் மெழுகிட்டு கோலமிட்டு வழிபட வேண்டும். பக்தர்கள் கொண்டு வரும் சாம்பிராணி தைலத்தை அன்னைக்கு காப்பாக அர்ச்சகர்கள் கொடுப்பார்கள். பிறகு கரு வளரவும் சுகப்பிரசவத்துக்கும் அன்னைக்கு சாத்தியாக சாம்பிராணி தலைகாப்பு பிரசாதமாக வழங்கப்படும். எலுமிச்சையும் உருண்டை மஞ்சளையும் அம்பிகையின் பாதத்தில் வைத்து மந்திரித்து கொடுப்பார்கள். மகப்பேறு வேண்டும் என்று வரும் பெண்மணி மஞ்சள் உருண்டைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று அரைத்து தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாறு சர்க்கரை சேர்த்து பழரசமாக குடித்து வரவேண்டும் நான்காவது மஞ்சளை தேய்த்து குளிக்கும் போது பெரும்பாலான பெண்கள் அன்னையின் அருளால் தங்கள் வயிற்றில் கரு வளர்வதை உணர்வார்கள். குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் வளைகாப்பின் போது ஒரு வளையல் ஆவது எடுத்து வைத்து அம்மனுக்கு வந்து பிறகு வளைகாப்பு நடத்த வேண்டும் பின்னர் சிறு தொட்டிலோடு சேர்த்து அவற்றைக் கொண்டு வந்து அன்னைக்கு அர்ப்பணிக்க வேண்டும் இவ்வாறு அன்னையிடம் வேண்டிக் கொண்டு சென்று நடந்த பின்பு அன்னையின் அருளை பெற்று வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள் சமர்ப்பித்த வளையல்களும் குழந்தை தொட்டில்களும் ஆலயத்தில் வரிசையாக கட்டி தொங்க விடப்பட்டிருக்கின்றனர்.
கரு அளித்து அதற்கு உயிர் கொடுத்து வளர்க்கும் அன்னை அகிலாண்டேஸ்வரியையும் அகிலத்தை காக்கும் அகத்தீஸ்வரரும் நமக்கு என்றும் உறுதுணையாய் இருப்பார்கள்.அவர்களின் பாதத்தை நாம் சரணடைய வேண்டும் இவ்வாறு சரணடைவதால் பலருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
குறிப்பு:( கரு வளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் உள்ளது.