Cinema: அனிருத் மற்றும் அட்லி இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தற்போது சாய் அபயங்கரை அறிமுகம் செய்து வருகிறார் அட்லி.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் அனிருத். தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தவிந்து கனடா என முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். சமீப காலங்களாக சாய் அபயங்கர் நிறைய திரைப்படத்தில் கமிட் ஆகி வருகிறார் இது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிம்பு மற்றும் அட்லி இடையிலான உறவு என்பது மிக பெரிய நட்பு வட்டாரம் எனவே கூறலாம். இவர்கள் இருவரும் அடிக்கடி கைபேசியில் பேசிக் கொள்வதுண்டு, மேலும் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படம் இயக்க வாய்ப்புள்ளதாகவும் அவ்வப்போது சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிம்பு அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதில் சிம்பு 49 50 51 ஆகிய அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த மூன்று படங்களில் 49 மற்றும் 51 இந்த இரு திரைப்படங்களிலும் இசையமைப்பாளராக சாய் அபயங்கரை கமிட் செய்துள்ளனர். இதற்குக் காரணம் அட்லி தான் அட்லி சிம்புவுடன் சாய் அபயங்கரை அறிமுகம் செய்துள்ளார் இவர் பின்னாளில் மிகப்பெரிய இசையமைப்பாளராக வரும் அளவிற்கு திறமை உள்ள ஒரு இசையமைப்பாளர் இவரை நீங்கள் உங்கள் திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டும் என கூறியதன் பேரில் அவர் இரு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
மேலும் ஜமான் திரைப்படத்தின் போது அட்லி மற்றும் அனிருத் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கேட்ட நேரத்தில் இசையமைத்து தரவில்லை என சிறிய கருத்து வேறுபாடு இருவரிடையே ஏற்பட்டுள்ளது இதன் காரணமாகத்தான் அட்லி சிம்புவிடம் மற்றும் தெரிந்த நண்பர்கள் இடம் இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிமுகம் செய்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.