ஏடிஎம் கார்டு நவீன காலகட்டங்களில் விடுமுறை நாட்களில் கூட 24 மணி நேரங்களிலும் எப்பொழுது பணம் தேவை ஏற்படினும் அப்போது அந்த பணத்தை இந்த கார்டு வசதி மூலம் நாம் பெற்றுக் கொள்ளலாம். முன் காலத்தில் கேசியரின் வேலைப்பளுவை குறைப்பதற்காக இது அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தற்சமயம் இது இல்லாத நபர்களையே நம்மால் பார்க்க முடியாது. அனைவரும் இது குறித்து தகவல் முழுமையாக அறிந்திருப்பதில்லை என்பதை நிதர்ஷண உண்மை. இது குறித்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக ஏடிஎம் கார்டு பணம் எடுப்பதற்கு மட்டுமே என்று அனைவரும் அதை யூஸ் செய்து வருவார்கள். ஆனால் இதில் ஒளிந்துள்ள சூட்சமமே அதில் ஆக்சிடென்ட் கவரேஜ் உள்ளது என்பதுதான்.
இந்த ஆக்சிடன்ட் கவரேஜில், சாலை விபத்துகள் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் விபத்துக்கள், மாடியில் இருந்து விழுந்து மரணம், வனவிலங்குகளால் ஏற்பட்ட மரணம், இயற்கை சீற்றங்களால் மரணம் ஆகியவையும் இந்த ஏடிஎம் கார்டின் விபத்து பகுதியில் அடங்கும். விபத்து காப்பீடு எவ்வளவு வரும் என்ற கேள்விக்கு அது ஏற்படும் விபத்து குறித்தும், ஏடிஎம் கார்டில் எந்த வகை பயன்படுத்துகிறோம் என்பது குறித்தும் (rupay, visa, master ), அந்தக் கார்டின் மூலம் ஏற்பட்டுள்ள ட்ரான்ஸ்லேஷன்ஸ் பொருத்தும் அந்த மதிப்பீடு மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்தந்த வங்கிகளை பொறுத்தும் கவரேஜ் தொகை மாறுபடும். மேலும் அதிக கவரேஜ் வேண்டும் என்றால் வங்கி மேலாளர்களை சந்தித்து இன்சூரன்ஸ் குறித்து விசாரித்து எந்த காரில் அதிக கவலை ஏற்படும் என்ற விவரம் கேட்டு அந்த கார்டை பூர்த்தி செய்து பெற்று கொள்வது நல்லது. இந்த ஆக்சிடென்ட் க்கு எந்த ஒரு காசும் எஸ்டாக பிடிக்கப்படுவது இல்லை. இதற்கு தகுதி என்பது ஒரு மனிதர் இறக்கும் முன்னர் அவரது கார்டை 30 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் உபயோகித்திருக்க வேண்டும் என்பதே. ஏதேனும் விபரீத மரணம் அடைந்தால் மரணித்த குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கி மேலாளரை சந்தித்து இன்சூரன்ஸ் பார்ம் கிளைம் செய்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.