ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல்!! இஸ்ரேலுக்கு கத்தார் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்!! 

Attack against Hamas!!
காசா: ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு கத்தார் நாட்டின் கத்தார் வெளியுறவு அமைச்சகம் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பிரிவினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதலானது விமானப்படை மற்றும் தரைவழி தாக்குதல்களும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மற்றும் மாஸ் பிரிவினருக்கு இடையே நடந்து வரும் தாக்குதலை நிறுத்துவதற்காக பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கத்தார் தலைநகர் தோகாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்தபோது எங்கும் புகை சூழ்ந்து காணப்பட்டது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கத்தார் மீது தாக்குதல் நடத்தியது இதுவே இரண்டாவது முறையாகும் என கத்தார் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கத்தார் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தியதற்காக ஹமாஸ்  தலைவர்களை குறி வைத்து கத்தார் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதால் கண்டனம் தெரிவித்துள்ளது கத்தார் வெளியுறவு அமைச்சகம். இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பின்போது மஜீத் அல் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தார் தலைநகர் தோகாவில் உறுப்பினர்கள் வசிக்கின்றனர்.
அவர்களை குறிவைத்து கோழைத்தனமான இந்த இஸ்ரேலின் தாக்குதலுக்கு கத்தார் அரசு கடுமையாக கண்டிக்கிறது. இந்த குற்றவியல் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறை ஆகியவற்றை மீறும் செயலாகும். இது கத்தார் குடிமக்கள் மற்றும் கத்தாரில் வசிப்பவர்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இது தொடர்ந்தால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram