மும்பை: மராட்டிய மாநிலத்தில் புனே ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சிறு சிறு பிரச்னைகளுக்கே போராட்டங்கள், வன்முறையை கையாளுவது, அத்துமீறல் என ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மனநலம் பாதிக்கபட்ட இளைஞர் காந்தி சிலையை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்
புனே ரயில் நிலையத்தில் மகாத்மா காந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06/07/2025) நள்ளிரவு காந்தி சிலையை உடைக்கும் முயற்சியில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
காந்தி சிலையை உடைக்க முயன்றதால் பரபரப்பு சூழல் நிலவியது. சிலையை உடைக்க முயன்ற இளைஞரை கண்ட ரயில் பயணிகள் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இளைஞரை பிடித்து போலீசாரிடமும் ஒப்படைத்தனர் பயணிகள். இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் இளைஞர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுராஜ் சுக்லா என தெரிய வந்தது.
தகவலின் பேரில் அவரைப் பிடித்த போலீசார் விசாரித்ததில் இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டதால் தான் காந்தி சிலையை உடைக்க முயன்று உள்ளார் என்பதும் தெரியவந்தது.
சுராஜ் சுக்ராவை கைது செய்த போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 14 நாட்கள் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.