ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி செக்டாரில் நேற்று நள்ளிரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி நடந்துள்ளது. பாகிஸ்தானின் வீரர்கள் அத்து மீறியதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதால் பதிலடி கொடுக்கும் வகையில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பினருக்கும் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக இந்திய எல்லை ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்து நடவடிக்கைக்கு பிறகு நடந்த முயற்சியை மிகப்பெரிய ஊடுருவும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஊடுருவல் முயற்சி நடைபெறும் போது மிகவும் மோசமான வானிலை இருந்ததால் ஊடக முயற்சி நடைபெற்ற போது ராணுவ வீரர்களின் பாதுகாப்பு படைகள் அதனை முறியடித்து எனினும் இந்திய வீரர் ஒருவர் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் பிறகு மிகப்பெரிய எல்லை ஊடுருவல் பாகிஸ்தான் நடத்தியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை கையில் எடுத்து பயங்கரவாத முகாம்களை அளித்தது. வான்வழி தாக்குதல் மட்டுமல்லாது ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது இந்தியா.
இதன்மூலம் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. மேலும், சிந்து நதி நீர் திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் உற்ற உலக நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குவதாக தகவல்கள் தெரிவித்தன. “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானை இந்தியாவிடம் சரணடையச் செய்தது.