2025 ஆம் ஆண்டுக்கான குரூப் தேர்வுகள் குறித்த முக்கிய தகவல் எப்பொழுது வெளியிடப்படும் என்றும் அதற்கான செயல்முறைகள் தற்பொழுது எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்தும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ் கே பிரபாகர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ் கே பிரபாகர் குரூப் தேர்வுகள் குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
போட்டி தேர்வுகள் ஆனது குரூப்-1 குரூப் 4 குரூப் 2 குரூப் 2a என மொத்தம் ஏழு பிரிவுகளின் கீழ் நடைபெறும் என்றும் அவற்றுக்கான அறிவிப்புகள் முறையே ஏப்ரல் 1 மற்றும் ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்படுவது வழக்கமான ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் வெளியாகும் என்றும் அதற்கான காலி பணியிடங்களின் உடைய எண்ணிக்கை அரசு அலுவலகங்களில் இருந்து மார்ச் மாதத்தில் தான் தங்களுக்கு வந்து சேரும் என்றும் அதன் பின்பு தான் எத்தனை காலி பணியிடங்கள் உள்ளன என்பது குறித்த முழு விவரத்தோடு தங்களால் தேர்வு விவரங்களை வெளியிட முடியும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தேர்வர்களுக்கு தேர்வு எழுதுவதில் சிரமம் இல்லாமல் இருப்பதற்காக விடைத்தாள்கள் எளிமையாக்கப்பட்டிருப்பதாகவும் இந்த முறை உடனடியாக விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்ட மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்றும் இதில் சிறிதளவு கூட தவறுகள் நிகழாத அளவிற்கு அனைத்தையும் மேம்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.