ஆஸ்திரேலிய முக்கிய வீரர்களில் ஒருவர் தான் டேவிட் வாரார் இவர் இந்தியாவில் அதிக அளவிலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடிய போது அங்கு இருந்த தெலுங்கு மாநிலத்தின் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இழுத்தார்.
அதுமட்டுமில்லாமல் அவர் தெலுங்கு சினிமா திரைப்படத்தை பார்த்து மைதானத்தில் அந்த திரைப்படத்தின் ஸ்டைலை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார். இதன் மூலம் புஷ்ப படத்தின் பாடல் மற்றும் அல்லு அர்ஜுன் மற்ற திரைப்படங்களின் வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு நடனமாடி வீடியோ பதிவை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு instagram பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் தெலுங்கில் நடிகர் நித்தின் நடிக்கும் ராபின் வுட் திரைப்படத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவலை ஹைதராபாத்தில் நடந்த கிங்ஸ்டன் படத்தின் முன் வெளியிட்டு நிகழ்வின் போது உறுதிப்படுத்தினார் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவிசங்கர்.
இதுகுறித்து அவர் கூறிய போது கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ராபின்ஹூட் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் அந்த சிறப்பு தோற்றமானது திரையில் தோன்றும் போது ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருக்கும் என்றும் சங்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பல மாதங்களாக டேவிட் வார்னர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று நினைவு வந்த யூகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சங்கர்.