இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் பேட் கேர்ள் திரைப்படம் டீஸர் ரிலீஸின் போதிலிருந்தே, தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றது. வெற்றிமாறனின் துணை இயக்குனர் வர்ஷா பரத் இப்படத்தை இயக்கி உள்ளார். சரண்யா, ரவிச்சந்திரன் போன்ற பல நடிகர்களின் கதாபாத்திரங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இசையமைப்பாளர் அமித் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது.
பேட் கேர்ளின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது. இதில் சாதாரணமாக போதைப்பொருட்களை பயன்படுத்துவதும், கேஸ்வலாக தவறு செய்வதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதால், அதுவும் குறிப்பிட்ட சமூகத்தை வெளிப்படையாக காட்டியிருப்பதால் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதலே பெரும் எதிர்ப்பு வந்து கொண்டே இருக்கிறது. என்னதான் எதிர்ப்பு இருந்தாலும், ஹோலிவுட் சார்பில், ரோட்டர்டோமில் கலந்துகொண்டு நெட் பாக் விருது பெற்றிருந்தது.
ரோட்டர்டோமில் இடம்பெறுவதே மிகக் கடினம். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் மற்றொரு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இதற்கு தணிக்கை சான்று வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் விசாரித்து, இந்தப் படம் இன்னும் தணிக்கை சான்றுக்காக அப்ளை செய்யப்படவில்லை என்று தள்ளுபடி செய்துள்ளது. ஏற்கனவே, பல பிரச்சினைகளை சந்தித்து இது இருக்கும் நிலையில், இப்பொழுது மீண்டும் தொடர்ந்து பிரச்சினையில் சிக்கி வந்த நிலையில், அடுத்து என்ன பிரச்சனையில் சிக்குமோ என்ற பார்வையிலே இந்த படத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.