புதுடெல்லி: தியேட்டர்களில் வெளியாகும் சினிமாக்கள் சில வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் வெளியாகி விடுகிறது. ஓடிட்டு தளங்களின் வருகையால் சினிமா தொடர்கள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளை வீட்டிலிருந்து காண முடிகிறது. சினிமா தொடர்கள் மட்டுமல்லாத சில ஆபாச படங்கள் மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் என அனைத்து ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓடிடி தளங்களை முடக்குவது மட்டுமல்லாமல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தற்போது 25 ஓட தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓடிடி தளங்கள் இணைய தளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் ஆகியவற்றை முடக்கப்பட்டுள்ளது. ஆல்ட், பூமெக்ஸ், நவரச லைட், லுக் என்டர்டெயின்மென்ட், ஹிட் பிரைம் போன்ற 25 ஓடிடி தளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் 2021 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 25 தளங்களும் எந்த வகையிலும் அணுக முடியாத வகையில் அழித்துவிட வலியுறுத்தியுள்ளது. அரசு தடை செய்யப்பட்ட 25 ஓடிடி தளங்கள் நீண்ட காலமாக பாலியல் வார்த்தைகள் , எந்தவித கதைக்களமும் கருப்பொருளோ இல்லாத செய்திகள் மற்றும் பாலியல் காட்சிகளை ஒளிபரப்பி வந்ததாக மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி இருந்துள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட 25 ஓட தளங்களில் 5 நிறுவனங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது. இவை மேலும் வேறொரு பெயரில் இயங்கி வந்ததை கண்டறியப்பட்டு தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.