இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள அகமதியா சமூகத்தினருக்கு முஸ்லிம் பண்டிகையான பக்ரீத் பண்டிகையை கொண்டாட தடை விதித்துள்ளது ஷெரீப் அரசு. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அகமதியா சமூகத்தினருக்கு முஸ்லிம்களின் புனித பண்டிகையான பக்ரீத் கொண்டாட தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. தடையை மீறி பக்ரீத் கொண்டாடினால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் நாளை ஜூன் 7 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் தயாராகி வரும் நிலையில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பக்ரீத் கொண்டாட முடியாமல் தடை விதித்துள்ளது ஷெரீப் அரசு. அங்குள்ள அரசு பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்கு தடையை அறிவித்துள்ளது.
அகமதியா சமூகத்தினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாட மாட்டோம் என உறுதிமொழி செய்யவும் போலீசார் வற்புறுத்தியது தகவலில் தெரியவந்துள்ளது. இருபது லட்சத்துக்கும் அதிகமான அகமதியா மக்கள் நீண்ட காலமாக பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
1974 ல் அகமதியா மக்கள் முஸ்லீம் இல்லை என அறிவித்தது. பின் 1984 ல் இஸ்லாமிய சடங்குகளை செய்வது குற்றம் எனவும் ,வழிபாட்டு தலங்களை மசூதி என அழைக்கக்கூடாது, குர்ஆணை ஓதுதல் கூடாது என பல இன்னல்களை சந்தித்து வருகிறது. 2024 ல் குர்பானி கொடுத்த 36 பேரை கைது செய்தனர். நீதித்துறையும் முகமதிய சமூகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை.
அஹ்மதி சமூகத்தினர் இஸ்லாமிய சடங்குகள் நடத்த நடவடிக்கை எடுக்க பஞ்சாப் இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு லாகூர் உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் கடிதம் எழுதியுள்ளது. அகமதியா முஸ்லிம்கள் குர்பானி சடங்குகள் போன்ற பிற இஸ்லாமிய சடங்குகளை வீடுகளில் செய்யக்கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பக்ரீத் சடங்குகளை கடைபிடிக்க மாட்டோம் என்று அகமதியா சமூகத்தினரை உறுதிமொழி எடுத்ததை குறித்து சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் போலீசார் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மீறி குர்பான (விலங்குகளை பலியிடுதல்)கடைப்பிடித்தால் 5,00,000 பாகிஸ்தான் ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.





