வாஷிங்டன்: அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு தடை விதித்துள்ளது உள்ளூர் நிர்வாகம். அதன்படி நடமாடும் வீடுகளில் வசிக்க தடை விதித்துள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்த விதிமுறைகளை அமல்படுத்தவும் உள்ளது அந்த நிர்வாகம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சுமார் எட்டு லட்சம் பேர் குடியேறி வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இருப்பவர்கள் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் இருந்து பணிக்காக வாடகை குடியிருப்புகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால் வீடுகள் வாடகைக்கு கூட எளிதில் கிடைப்பதில்லை. இந்த நிலையை சமாளிக்க தங்களது வாகனங்களிலேயே வீடு போன்ற வசதிகளை ஏற்படுத்தி அதில் வசித்து வருகின்றனர். வீடு போன்ற வசதி கொண்ட வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சாலை ஓரங்களில் இந்த இதுபோன்ற நடமாடும் வீடுகளால் சுகாதார கேடுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் நடைபாதைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள சான் பிரான்சிஸ்கோ நகர நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நடமாடும் வீடுகளில் வசிக்க தடை விதித்துள்ளது.
மேலும், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு சில விதிமுறைகளை அமல்படுத்தவும் உள்ளூர் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இனி நடமாடும் வீடுகளுக்கு உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.