CRICKET : நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் பெங்களூர் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவி உள்ளது பெங்களூர் அணி.
நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரின் 34வது போட்டியான பெங்களூர் மற்றும் பஞ்சாப் இடையிலான போட்டி நேற்று நடைபெற இருந்த நிலையில் நீண்ட நேரமாக பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மழை பெய்த காரணத்தால் போட்டி தாமதமானது. இதனால் டாஸ் 9:30க்கு போடப்பட்டது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது.
இந்த போட்டியானது தாமதமாக தொடங்கியதால் 14 ஓவர் அடிப்படையில் இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் களமிறங்கிய பெங்களூர் அணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் 95 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்தது. இதில் தொடக்க வீரர்களான விராட் கோலி ப் சால்ட் போன்ற முக்கிய அதிரடி வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்த நிலையில், பெங்களூர் அணியின் பினிஷரான டின் டேவிட் நிலையாக விளையாடி அரை சதம் விளாசினார்.
இந்நிலையில் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 14 வது ஓவரில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் சொந்த மைதானத்தில் அதிக போட்டியில் தோல்வி பெற்ற அணியென பெங்களூரு அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இதுவரை பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் 46 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. டெல்லி அணி 45 போட்டிகளில் சொந்த மைதானத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.