வங்கி ஊழியர்களின் பல நாள் கோரிக்கை தற்பொழுது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப் பட முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.இது உறுதி செய்யப்படும் பட்சத்தில் வங்கி ஊழியர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு என வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும்.
இப்பொழுது வங்கிகளில் 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமை மட்டும் விடுமுறை நாட்களாக பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை வங்கிகளில் பணி புரிய கூடிய ஊழியர்கள் வைத்து வந்த பல நாள் கோரிக்கை மட்டும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை மத்திய அரசு கவனித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை நிறைவேற்றப்படும் பட்சத்தில் பொதுத்துறை வங்கிகளில் பணி புரிய கூடிய ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்றும் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக ஷிப்ட் முறையில் காலை அல்லது மாலை நேரத்தில் கூடுதலாக வங்கிகளை திறக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் வாடிக்கையாளர்களின் நலனை கருதியும் மத்திய அரசால் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இது குறித்து மத்திய அரசு தரப்பில் பரிசீலனைகள் நடைபெறுகிறது என்றும் இந்தியன் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு வங்கி ஊழியர்களுக்கான வாரத்தில் இரு நாள் விடுமுறை நாட்களாக அறிவிக்கும் பட்சத்தில் காலையில் வங்கிகளை சீக்கிரமாக திறத்தல் அல்லது மாலை நேரங்களில் கூடுதல் நேரம் வங்கிகளை திறந்து வைத்தல் போன்ற ஷிப்ட் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதற்கான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.