கிரிக்கெட்: இந்திய அணி தற்போது சமீபத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது இதற்கு பரிசு தொகை அறிவித்துள்ளது பிசிசிஐ.
பாகிஸ்தான் அணி நிர்வாகம் இந்த ஆண்டு நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து நிலை போட்டிகளிலும் வெற்றி பெற்று எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதி கோப்பையை வென்றது. ஆனால் இந்த வெற்றிக்குப் பின் பல விமர்சனங்கள் வரிசையாக எழுப்பப்பட்டன.
இந்திய அணி சில அரசியல் ரீதியான பிரச்சனைகளால் பாகிஸ்தான் மைதானங்களுக்கு சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது பிசிசிஐ. இதனால் இந்திய அணி அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாட முடிவு செய்தது. ஒவ்வொரு லீக் போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலும் இந்திய அணியை வெற்றி பெற்றது இதனால் பல நாட்டின் கிரிக்கெட் வல்லுனர்களும், ஒரே மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்று விட்டது. என பல வகையான விமர்சனங்களை எழுப்பினர்.
தற்போது பிசிசிஐ இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தேர்வு குழுவினருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் வகையில் ரூ.58 கோடி பரிசுத்தொகையாக இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிவித்துள்ளது பிசிசிஐ. இது பயிற்சியாளர் வீரர் தேர்வு குழுவினர் என அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.