cricket: இந்த ஆண்டுக்கான ipl தொடர் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடிரென இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்று வந்த போர் பதற்ற சூழ்நிலையில் ipl போட்டிகள் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த ஆண்டு தொடங்கிய ipl தொடரில் அனைவரும் எதிர் பார்த்த சென்னை அணி ப்ளே ஆஃப் கூட செல்லவில்லை. இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத பெங்களுரு அணி இந்த முறையாவது கோப்பை வெல்லுமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் பெங்களுரு அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதனை தொடர்ந்து இந்த சூழ்நிலையில் போட்டிகள் ஏதும் நடைபெறாது என கூறப்பட்டு வந்த நிலையில் போர் முடிவுக்கு வந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த போட்டி தொடரானது மீண்டும் தொடங்கப்படும் என அட்டவணை பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த சூழ்நிலையில் பெங்களுரு அணியில் தான் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர் தற்போது போர் பதற்றத்திற்கு பின் முக்கிய வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறிய நிலையில் பெங்களுரு அணியின் ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வந்துள்ளது. சமூகவலைதளங்களில் கூறியவாறு இல்லாமல் அணைத்து வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனை பெங்களுரு அணி நிர்வாகம் அவர்களது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதனால் பெங்களுரு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த முறையாவது பெங்களுரு அணி முதல் கோப்பையை வெல்லுமா? உங்களின் கருத்து என்ன?