பெங்களுரு vs பஞ்சாப் இன்று மோதல்!! இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்??

Bengaluru vs Punjab clash today

cricket: இன்று பஞ்சாப் மற்றும் பெங்களுரு அணிகளுக்கு இடையே முதல் குவாலிஃபயர் போட்டி நடைபெறவுள்ளது.

நடைபெற்று வரும் ipl தொடரில் அணைத்து லீக் போட்டிகளும் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது  இறுதிபோட்டிக்கு   குவாலிஃபயர் 1 , குவாலிஃபயர் 2 மற்றும் எலிமினேட்டர் என மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில் இன்று முதல் குவாலிஃபயர்1 போட்டி பெங்களுரு மற்றும் பஞ்சாப் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இதுவரை இந்த சீசனில் விளையாடிய  2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக பெங்களுரு அணி லக்னோ அணியுடன் விளையாடிய போட்டியில் 227 ரன்களை எட்டி அபார வெற்றியை பதிவு செய்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த வெற்றியின் மூலம் முதல் குவாலிஃபயர் 1 முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்று இன்று பஞ்சாப் மற்றும் பெங்களுரு அணி மோதவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் இரண்டாவது வாய்ப்பு உண்டு.  இரண்டாவதாக எலிமினேட்டர் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை இரு அணிகளும் மோதவுள்ளன. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram