இளையராஜாவுக்காக காத்திருக்கும் பாரத ரத்னா விருது!! கொண்டாட்டத்தின் உச்சியில் ரசிகர்கள்!!

Bharat Ratna Award waiting for Ilayaraja!! Fans in high spirits!!

1500 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் இசை உலகின் ஜாம்பவானாக திகழ்கிறார். சமீபத்தில் இவர் உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து 34 நாட்களுக்கு சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றம் செய்தார்.

அரங்கேற்றத்திற்கு பின் தமிழகம் திரும்பிய இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் அழைப்பு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்த விழா ஒன்று எடுக்கலாம் என்றும் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது. அவரைத்தொடர்ந்து நடிகர் சிவகுமார் கூட நேரில் சென்று அவரிடம் வாழ்த்து சொல்லி தங்க சங்கிலி ஒன்றையும் பரிசளித்திருக்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் நேரில் சந்தித்த வாழ்த்து பெற்றதை இசைஞானி இளையராஜா அவர்களே தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு சிம்பொனியால் மொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க செய்ததோடு அனைவரும் தன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு சாதனைகளின் உச்சத்தில் இருக்கிறார் இசைஞானி இளையராஜா அவர்கள்.

தமிழ் சினிமாவில் குறிப்பாக இசை உலகில் 50 ஆண்டுகால சாதனையை மேற்கொண்டு இருக்கக்கூடிய இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சினிமா துறையில் பொன்விழா எடுப்பார்களா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கிறது. எனினும் மறுபுறம் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேருதானது எம்ஜிஆர் ஏபிஜே அப்துல் கலாம் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram