கன்னத்தில் அறைந்த பைக்  ஓட்டுநர்!! பெங்களூரில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம்!!

Bike driver slapped on the cheek!!
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெய நகரை சேர்ந்த ஸ்ரேயா தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி ஸ்ரேயா அலுவலகத்திற்கு செல்ல பைக் டாக்ஸி புக் செய்து இருக்கிறார். பைக் டாக்ஸி ஓட்டுநரின் பெயர் சுகாஷ். சுகாஷ் பைக்கை வேகமாக ஓட்டியதாகவும், சிக்னலில் நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  குறுகிய வழி என்று கூறி மாற்று பாதையில் அழைத்து சென்றதாக கூறப்பட்ட நிலையில் ஸ்ரேயா கேள்வி எழுப்பியுள்ளார்.
மெதுவாக செல்ல வேண்டியதுதானே? ஏன் வேகமாக செல்கிறீர்கள்? என்று பைக் ஓட்டுனரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு திமிராக பதிலளித்த வாகன ஓட்டி வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும் என்றும், ஐந்து ஆண்டுகளாக பைக் ஓட்டி வருகிறேன் என்றும் கூறியுள்ளார். வாகன ஓட்டி பெண் ஊழியரிடம் திமிராக பதிலளித்துள்ளார். இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை தீவிரமடைந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு தீவிரம் அடைந்த நிலையில் வாகன ஓட்டி சுகாஷ் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்துள்ளார். அறைந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஸ்ரேயாவை சிலர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஜெயநகர் போலீசில் பெண் ஊழியர் புகார் அளித்துள்ளார்.
விசாரணை என்பது ஓட்டுநர் பெண் ஊழியரை அடித்தது உறுதியானது. இதையடுத்து போலீசார் ஓட்டுனரின் மீது வழக்குப்பதிவு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram