பயோமெட்ரிக்ஸ் மூலம் சுய விவரம் திருட வாய்ப்பா!! லாக் செய்யும் ட்ரிக்ஸ்!!

பயோமெட்ரிக்ஸ் என்பது நமது கருவிழி, கைரேகை மற்றும் பேஃஸ் டேட்டாஸ் ஆகியவை உள்ளடக்கியது. இது ஆதார் மூலம் அனைவரது தரவுகளும் அரசின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு முக்கிய கவர்மெண்ட் சார்ந்த வேலைகள் என்றாலும் அதற்கு ஆதார் என்பது அத்தியாவசியமான ஒன்று. இதில் இணைக்கப்பட்டு இருக்கும் பயோமெட்ரிக் மூலம் நமது தரவுகள் திருடப்பட அதிக வாய்ப்பு உண்டு. மேலும் அது தவறாக பயன்படுத்தவும், தகவல் திருடப்படுவதற்கும் ஹேக்கர்ஸ்களுக்கு ஏதுவாக அமையும்.

இவ்வளவு முக்கியமான செயல்பாட்டில் உள்ள பயோமெட்ரிக்கை நம்மால் எளிதில் லாக் செய்து கொள்ளலாம். தேவைப்படும் சமயத்தில் அன்லாக்கும் செய்து கொள்ளலாம். இதற்கு ஆதாரை செயல்படுத்தக்கூடிய UIDAIயே ஒரு வழிமுறையை வகுத்துள்ளது. UIDAI ஃபோர்ட்டல் மற்றும் mAadhaar ஆப் மூலம் இதன் யூசர்கள் அவர்களது பயோமெட்ரிக்சை எப்பொழுது வேண்டும் என்றாலும் லாக் அல்லது அன்லாக் செய்து கொள்ளலாம் என்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் லாக் செய்து கொண்டால், உங்களது சொந்த அனுமதி இன்றி உங்களது பயோமெட்ரிக்ஸ் வேறு இடங்களில் சிம் கார்டுகளுக்காகவோ, பேங்கிங் டேட்டாஸ் வேலைக்காவோ மற்றும் இதர ஹேக்கிங் வேலைகளுக்கோ பயன்படுத்த முடியாது. தேவைப்படும் சமயத்தில் பயோமெட்ரிக்ஸை ஆப்பில் அன்லாக் செய்துவிட்டு, உபயோகித்துவிட்டு மீண்டும் லாக் செய்து கொள்ளலாம். இது கூடுதல் பாதுகாப்பை பயனர்களுக்கு அளிக்கும் என்று இந்த வழிமுறையை புகுத்தி உள்ளது ஆதார் நிறுவனம் UIDAI.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram