தற்பொழுது உள்ள காலகட்டத்தில் அனைத்து வகையான பொருளாதார சூழ்நிலை கொண்ட மக்களும் ஆன்லைனில் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் நிறுவனங்கள் ஆன்லைனில் முக்கிய பங்கு வகிப்பதால் அங்கு விநியோகம் செய்யப்படக்கூடிய பொருட்கள் தரமாக உள்ளதா என BIS அதிகாரிகள் சோதனை நடத்தியது மிகப்பெரிய அதிர்ச்சி வெளியிடப்பட்டிருக்கிறது.
அதாவது தற்பொழுது அமேசான் மற்றும் பிலிப்கார்ட் கிடங்குகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் முதல் கட்டமாக லக்னோ கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் ISI தரச் சான்றுகள் இல்லாமல் கண்டறியப்பட்டு அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து லக்னோ கிடங்குகளில் உரிய தரச்சான்று இல்லாத 229 நிறுவனங்களின் பொம்மைகளையும் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தபடியாக , குரு கிராமம் flipkart நிறுவனத்தில் கிடங்கில் சோதனை மேற்கொண்ட பொழுது 534 நிறுவனத்தை சேர்ந்த பொருட்கள் தரச் சான்றுகள் இல்லாமல் விநியோகம் செய்யப்பட்டதை கண்டறிந்து இருப்பதாகவும் அதில் 7000 வாட்டர் ஹீட்டர், ரூம் ஹீட்டர்கள் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்திருப்பது மக்களை அதிர்ச்சி அடைய செய்வதாக அமைந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் இதனை மத்திய அரசும் நுகர்வோர் அமைச்சகமும் பார்வையிட்ட வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.