தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல கட்சிகள் கூட்டணியில் இணைவதையும், புதிய கட்சிகள் உருவாவதையும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி மத்திய அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கலந்து கொண்டு உள்ளார். அதில் செய்தி அவர்கள் கேட்ட அடுக்கு கேள்விகளுக்கு அமித்ஷா பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக கட்சியின் செயல் உங்களுக்கு திருப்தி அளித்துள்ளதா என்ற கேள்விக்கு, அதிமுக மற்றும் பாஜக இணைந்த கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் தலைமை யார் வகிப்பார்கள் அதாவது முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, முதல்வராக எடப்பாடி நின்று அவர்கள் வழிகாட்டுதலின்படி, பாஜக நிர்வாகிகள் போட்டியிடுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் அதிமுக கூட்டணி வேண்டாம் என்று சென்றவர்களை நீங்கள் ஒன்று சேர்க்க முயற்சிக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதற்கு, நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. அவரவர் கட்சி அவரவர் உரிமை. அவர்களை தான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் நடிகர் விஜய் உருவாக்கிய தமிழக வெற்றிக்கழகம் உடன் கூட்டணி அமையுமா என்று கேட்டதற்கு அமித்ஷா சூட்சுமமாக, தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. இன்னும் சில காலம் காத்திருந்தால் எல்லாம் தெரிந்து விடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டணி குறித்து தவெகவிற்கு பாஜக தொடர்ந்து அழைப்பு விட்டு வருவது உறுதி செய்யப்படுகிறது. தொடர்ந்து இந்த கேள்வி குறித்து முடிவு தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் வெளிச்சத்திற்கு வரும்.





