பாஜக-பாமக கூட்டணியா?? கட்சி இரண்டாக உடையுமா?? அன்புமணி எடுத்த முடிவால் பரபரப்பு!!

பாமக தலைமைத் தலைமையில் நாளுக்குநாள் பரபரப்பான மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் தற்போதைய தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், குடும்பத் தகராறு ஆகி தற்போது கட்சி மோதலாக உருவெடுத்து விட்டது. இதே நிலையில், பாமக முழு அதிகாரத்திற்காக அன்புமணி கடுமையான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ராமதாஸ் மீது நேரடியாக குற்றச்சாட்டு கூறிய அன்புமணி, “கட்சியை நடத்தும் அதிகாரம் எனக்கே உள்ளது” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். கட்சியின் சட்ட விதிகள் மற்றும் பொதுக்குழு முடிவுகள் தன்னை ஆதரிக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

ராமதாஸ்–அன்புமணி மோதலில் கட்சி உள்பட குடும்ப உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ராமதாஸ் தனது மருமகள் சௌமியாவை அரசியலுக்கு கொண்டு வந்தது, பாஜக உடன் கூட்டணி அமைத்தது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேசமயம் அன்புமணி, தன்னை தவிர வேறு யாருக்கும் பாமகவில் சட்டப்படி அதிகாரம் இல்லை என்று வலியுறுத்தி வருகிறார். இந்த சூழலில், அன்புமணி டெல்லி சென்றுள்ளதை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அங்கே அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி உறவை வலுப்படுத்தவும், தனது தலைமை பூரண அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் இதன் மூலம் அன்புமணி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தல் ஆணையத்தில் கட்சி பொதுக்குழு முடிவுகளை பதிவு செய்து சட்டப்பூர்வ ஒப்புதலையும் பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தரப்பினருக்கும் தங்களது ஆதரவாளர்கள் உடனடியாகச் தன் பக்கம் இழுக்கின்றனர். பாமக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என பலர் ராமதாஸ் பக்கம் தாவுகிறார்கள் என்ற தகவலும் இருக்கிறது. இதனால் பாமக விரைவில் இரண்டாகப் பிரியும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. இந்த நிலையில் அன்புமணியின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாஜக பக்கம் முழு ஆதரவைப் பெற்றுக் கொண்டால் அன்புமணி தனது தலைமை பதவியை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பும் அவரிடம் உள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram