பெரும்பாலும் ரத்தத்தை பொறுத்து இளமை விகிதம் கூடுதலாகவும் குறைவாகவும் உள்ளது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக அதிக வாழ்நாள் கொண்ட மக்களாக ஜப்பானியர்கள் திகழ்கின்றனர். அவர்களில் மரபணு மற்றும் ரத்த வகை ஆகியவற்றில் அவர்கள் தனித்துவமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. A, B, O, AB ஆகிய இரத்த வகைகள் உள்ளன. இந்த ரத்த வகைகள் பொருந்திய பலதரப்பட்ட மக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த ஆராய்ச்சியில் B ரத்த வகை கொண்ட நபர்களின் உள்ளுறுப்புகள் அதிக வயது வித்தியாசத்தில் காணப்படுகின்றன என்ற தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு டோக்கியோவில் நூறு வயதிற்கு மேற்பட்ட, கிட்டத்தட்ட 250 நபர்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் தான் இந்த B வகை ரத்த உறுப்புகள் அதிக ஆக்டிவாக இருப்பதை கண்டறிந்து வெளியிட்டுள்ளார்கள்.
B வகை ரத்த சிவப்பணுக்களில் B ஆண்டிஜன்கள் அதிகமாகவும், சில A ஆன்ட்டிஜன்களை எதிர்த்து போராடும் ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளதாகவும், சிலர் செல்லுலார் பழுது செய்து கொள்வதாகவும், சிலர் இந்த ரத்த வகை வளர்ச்சிதை மாற்றத்தை சிறந்த முறையில் கையாளுகின்றன என்று பலதரப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இது போன்ற பலதரப்பட்ட ரத்த வகை கருத்துக்களை ஆராய்ச்சி செய்தும் B,O, A என்று தரவரிசை படுத்தியுள்ளனர். இதற்கு அப்பாற்பட்டவர்களும் உள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.