பொதுவாக உறுப்பு மாற்றுதல் என்பது கண் தானம் முதல் உடல் உள்ளுறுப்புகள் வரை அடங்கும். தேசிய அளவில் உறுப்பு மாற்று வெற்றிகரமான சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்து வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான உடல் உறுப்பு மாற்றங்களின் எண்ணிக்கை 268 பேரின் உடல் உறுப்பை மாற்றம் செய்த 1500 பேர் மறுவாழ்வு பெற்றிருந்தனர்.
மேலும் இறக்கும் உயிர்களின் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கியது முதல் இதன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது.
உள்ளுறுப்புகள் தானம் பொதுவாகவே மூளைச்சாவு அடைந்த நபரின் குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் அவர்களின் குடும்பத்தின் அனுமதியைப் பெற்று, குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் உறுப்பை பாதுகாப்பாக எடுத்து மற்றொரு தேவைப்படும் உயிருக்கு மிக நுணுக்கமாக மாற்றி அமைப்பதே மிக சவாலானது. அதிலும் கரெக்டான ஆப்ரேஷன், உறுப்பு சோதனை, நேரத்துக்குள் இன்னொரு உடலுக்குள் இணைப்பது போன்றவை மருத்துவ உலகிற்கே மிக கடினமானது தான்.
ஆனால் அதன் மூலம் புது வாழ்க்கை அளிக்க முடியும் என்ற காரணத்திற்காக மருத்துவர்கள் பிரத்தியேகமாக செயல்படுகின்றனர். மேலும் இந்த ஆண்டு அரையாண்டு முடிந்த நிலையில், இதுவரை 129 பேர் உடல் உறுப்பு தானம் செய்து அதன்மூலம் 725 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்த உடல் உறுப்பு தானத்தில் இதயம், சிறுநீரகம்,கல்லீரல், நுரையீரல், வயிறு பகுதி, தோல் கண்கள் ஆகியவை மாற்றம் செய்யப்படுகின்றன.