பாங்காங்: தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவுவதால் இரு நாட்டு ராணுவ வீரர்களும் கடந்த மே மாதம் தாக்குதலில் இறங்கினர். அப்போது நடந்த தாக்குதலில் கம்போடியா வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தங்களது எல்லையை மூடுவதாக அறிவித்திருந்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாய்லாந்தில் இருந்து காய்கறிகள் பழங்கள் இறக்குமதி மற்றும் திரைப்படங்களை திரையிட அரசாங்கம் தடை விதித்திருந்தது. இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இருநாட்டு தலைவர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போதும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
தாய்லாந்து நாட்டில் உள்ள கம்போடியா தூதரை வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும், கம்போடியா நாட்டில் இருந்து தாய்லாந்து தூதரையும் வெளியேற்றவும் உத்தரவிட்டது. தாய்லாந்தில் சுரின், சிசாகெட் மற்றும் கம்போடியாவின் ஒடார் மீஞ்சே ஆகிய எல்லைப்புற மாகாணங்களில் மோதல் வெடித்தது. இருநாட்டு ராணுவமும் ராக்கெட் குண்டுகள் மற்றும் பீரங்கி போன்றவற்றைக் கொண்டு தாக்கினர்.
கம்போடியா ராணுவம் சிஷா கெட் மாகாணத்தில் உள்ள பெட்ரோல் பங்க் மீது தாக்குதல் நடத்தியதில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். மற்ற இடங்களில் தாக்குதல் நடைபெற்றதில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டது.
செல்வதற்கு வேறு வழி இல்லாமல் பதுங்கு குழிகளில் மக்கள் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் தாய்லாந்து சர்வதேச எல்லையை ஒட்டி உள்ள 8 எட்டு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கம்போடியா உடன் தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள மூன்று தரப்பு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.