மும்பை: இன்றைய இளைஞர்கள் மத்தியில் செல்போன் என்பது அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. அன்றாட பயணங்கள் மற்றும் பணிகள் ஆகியவற்றை வீடியோ எடுத்து சோசியல் மீடியாக்களில் பகிர்வது வழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல இந்த பழக்கமானது மோகமாக மாறிவிட்டது.
அதில் கிடைத்த வரவேற்பு இன்று ஆபத்தாக முடிகிறது என்று தெரியாமல் பலரும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மராட்டிய மாநிலம் நவிமும்பையில் பெலாப்பூரை சேர்ந்த ஆரவ் ஸ்ரீவஸ்தவா 16 வயதுடைய இவர் கடந்த ஆறாம் தேதி நண்பர்களுடன் நேரில் ரயில் நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் பெட்டியின் மேல் ஏறி நின்று வீடியோ எடுக்கும் போது ரயில் பெட்டியில் மேலே செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சிறுவனின் கைகள் பட்டுள்ளது. மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்டார்.
அப்போது தலை மற்றும் உடலில் மற்ற இடங்களில் படுகாயம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் ஐரோலியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டது. ஆறு நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் ஆரவ் ஸ்ரீவஸ்தவா உயிரிழந்தார். ரூல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் மற்ற இளைஞர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.