ஸ்ட்ரஸ் ஃப்ரீயாக இருக்க ஒரு வழிமுறை!! அட! இது நல்லா இருக்கே!!

பொதுவாக மூளை ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடையே இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் புதிது புதிதாக ஒரு வேலையை செய்யும் போது, அதாவது ரெகுலர் ஒர்க்கிங் அல்லாத வேலைகள் மூளை புத்துணர்ச்சி பெறுகின்றன. அதனால்தான் புதியதாக ஒரு வேலை செய்யும்போது நம்மால் அளவுக்கு அதிகமாக நம்மால் முடியாத அளவு கூட அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடிகிறது. இதற்கு மூளையில் சுரக்கும் நியூரான்களை காரணம். மேலும் மூளை புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் மன உளைச்சல் கை நடுக்கம் டிப்ரஷன் பிரஷர் ஆகியவை அதிகளவு மாறுபடுகின்றது.

உதாரணத்திற்கு இல்லத்தரசிகள் சமையல் செய்வதை திரும்பத் திரும்ப செய்வதன் காரணமாகத்தான் அது அவர்களுக்கு ஒருவிதமான மன வெறுப்பை தருகின்றது. அவர்கள் வெளியே உள்ள வேலை செய்யும் போது அவர்கள் இயல்பை ஓட சந்தோசமாக இருப்பதை நம் அனைவராலும் கவனிக்க முடியும். அதற்குக் காரணம் அவர்களின் மூளைக்கு கிடைக்கும் புத்துணர்ச்சியே. மூளை ஆரோக்கியத்திற்காக ஒமேகா 3 அதிகம் உள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் அதிக அளவு நியூரான்கள் சுரக்கப்படுகின்றது. கீரைகள் புரதம் நிறைந்த பழங்கள் உணவுகள் ஆகியவை உடலுக்கு நல்லது. பாஸ்போர்ட் மற்றும் டால்டா போன்ற எண்ணெய் பொருட்கள் ஆகியவை தவிர்ப்பதும் நல்லது என்று ஒரு ரிப்போர்ட் அதன் தரப்பை சமர்ப்பித்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram