சேலம்: சேலத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் பெண் அழிவு நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக வெளியான தகவல் திடுக்கிடும் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தமிழகத்தை பொறுத்தவரை பல திடுக்கிடும் சம்பவங்கள் அதாவது பாலியல் கொலை கொள்ளை இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன இந்நிலையில், தினமும் இது போன்ற அதிர்ச்சியூட்ட பாலியல் சம்பவங்களும் கொலை சம்பவங்களும் நாம் கண்டு வருகிறோம்.
இந்நிலையில் நேற்று சேலத்தில் விடுதியில் தங்கி இருந்த ஒரு இளம் பெண் நான்கு நாட்களாக காணவில்லை, தேடிய பொழுது அந்த இளம் பெண் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பள்ளத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் அந்தப் பெண்ணுடன் பேசும் வாலிபரை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் அந்த வாலிபர் மாற்றி மாற்றி பதில் கூறி வந்தது குழப்பத்தை ஏற்படுத்தி வந்தது. அவர் அந்த விசாரணையில் விஷம் குடித்துக் கொண்டதாகவும் மேலும் மலையிலிருந்து தள்ளிவிட்டதாகவும் மாறி மாறி பேசி வந்த நிலையில் தற்போது திடுக்கிடும் திருப்பங்கள் வெளியாகி உள்ளன.
அப்துல் ஆபீஸ் என்ற அந்த வாலிபரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்த அந்தப் பெண் அவருக்காக மதம் மாறியுள்ளார், மேலும் அந்த வாலிபர் வேறு பெண்ணுடன் இன்ஸ்டால் பழகி வந்ததே பெண்ணுக்கு தெரிய வர சண்டையாக மாறி உள்ளது. அதன்பின் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது தற்போது இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்று பேரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.