பெய்ஜிங் : உலக நாடுகளுக்கெல்லாம் நான்தான் பஞ்சாயத்து தலைவர் என்று அலட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபருக்கு அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்து சேர்கிறது. அவரது ஆட்சி அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா மாஸ் காட்டி வருகிறது. அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சீனாவின் பிஒய்டி நிறுவனம் முன்னிலையில் உள்ளது. டெஸ்லாவின் சைபர் டிரக் விற்பனைக்கு வந்த போது பில்டப் எல்லாம் அதிகமாக இருந்தது.
தற்போது சீனாவின் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருந்தது. 2025 இல் இதுவரை 336 681 கார்களை உற்பத்தி செய்து டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் சீனாவின் பிஒய்டி கார்கள் மொத்தம் 416 388 கார்கள் இதுவரை விற்பனை செய்துள்ளது.
டெஸ்லாவின் model 3 விலை 32,500 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் சீனா பிஒய்டி தனது Qin L model- ஐ 16,500 அமெரிக்க டாலருக்கு குறைத்து விற்பனை செய்ததால் சீன கார்கள் விற்பனை அதிகமானது. டெஸ்லா கார்கள் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 270 கிலோ மீட்டர் செல்லலாம். சீன கார்கள் 400 கிலோ மீட்டர் வரை செல்லும்.
குறைந்த விலையில் அதிக லாபத்தையும் சிறப்பம்சங்களையும் கொண்டு சீனா முன்னிலை வகித்து வருகிறது. டெஸ்லா கார்கள் தானியங்கி முறைக்கு பெயர் பெற்ற போதிலும் பிஒய்டி கார்கள் அதை முறியடித்துள்ளது. முக்கியமாக ட்ரம்புக்கும் எலான் மஸ்க்கும் இடையே மோதல்கள் காரணமாக கார் மீதான மானியங்களை நிறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பிஒய்டி கார் நிறுவனம் தாராளமாக நிதி உதவி செய்து வருவதால் பிஒய்டி கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது.