குடியுரிமை கட்டுப்பாடுகளை தளர்த்திய கனடா!! 3 ஆண்டுகள் போதும்!! 

Canada eased citizenship restrictions!!

ஒட்டாவா: கன்னட நாட்டைத் தவிர வேறு நாடுகளில் குழந்தையை கனடா மக்கள் பெற்ற முதல் தலைமுறை குழந்தைக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. இரண்டாவது தலைமுறைக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. தற்போது அந்நாட்டு அரசு அனைத்து தலைமுறை குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க சட்ட சீர்திருத்தம் செய்து வருகிறது.

கனடா மக்களுக்கு வெளிநாட்டில் குழந்தை பெற்றெடுத்தால் அந்த குழந்தைக்கு கனடாவில் குடியுரிமை கிடைக்கும். மேலும், குடியுரிமை பெற்ற குழந்தை வளர்ந்து திருமணமாகி வெளிநாட்டில்  குழந்தையை பெற்றால் அந்த குழந்தைக்கு கனடாவில் குடியுரிமை அளிக்க மாட்டாது என்ற சட்டம் இருந்தது. இந்த சட்டத்தை சீர்திருத்தத்திற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் கனடாவில் குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களும்  வாழ்ந்து வருகின்றனர்.

அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் போல  இந்தியர்கள் குடியுரிமை பெறுவது கனடாவிலும் தற்போது நிகழ்ந்து வருகிறது. டிரம்ப் கொண்டு வந்த குடியேற்ற சட்டத்தினால் பல இந்தியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கனடாவில் புதிய சீர்திருத்தம் வரவேற்கத்தக்கதாக உள்ளது. சி 3 என்னும் புதிய குடியுரிமை சீர்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கனடாவில் ஒருவர் குடியுரிமை பெற்று விட்டால் அவரது வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்குவது கனட  நாட்டின் கடமை என்றும், அவரது வம்சாவளியினருக்கு குடியுரிமை மறுப்பது சரியான முடிவு அல்ல என்றும் கூறியிருந்தது ஒன்டாரியோ உயர் நீதிமன்றம். உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் கனடாவில் மக்கள் தொகையை அதிகரிக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

சி 3 என்ற புதிய குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து சந்ததியினருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்றும், அதற்கான அளவுகோல்  மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்படுகிறது என்றும், கனடாவில் 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும், எங்கு வேண்டுமென்றாலும் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் அதற்கான குடியுரிமையை கனடா வழங்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram