Cricket: இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி இதன் மூலம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. முதல் போட்டியில் தோல்விக்கு காரணம் இந்திய அணியின் மோசமான பந்துவீச்சு. தொடர்ந்து இரண்டாவது போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணி வெற்றியை பதித்துள்ளது.
இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பௌலிங் செய்தது. இதில் முதலீட்டில் இந்திய அணி 587 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது இதில் கேப்டன் கில் 269 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதலில் 47 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 427 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளர் செய்தது.
67 ரன்கள் எடுத்தால் வெற்றி என களம்புறீங்க இங்கிலாந்து அணி 271 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட் இழந்தது இதன் மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பதிவு செய்துள்ளது. 58 ஆண்டுகளுக்குப் பிறகு எட்ஜ் பாஸ்டன் பர்மிங்கம் மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்திய அணி. மேலும் இந்த தொடரின் ஆட்டநாயகன் விருதை கேப்டன் கில் தட்டிச் சென்றார் இரண்டு இன்னிங்ஸிலும் அவர் மொத்தம் 431 ரன்கள் குவித்துள்ளார்.