சமீப காலமாகவே பார்க்கிங் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறி உள்ளது சென்னையில். சென்னையில் மக்கள் தொகை அதிகம் காரணமாக இடவசதி குறைவு. தமிழகத்தின் தலைநகரம் என்பதால் அங்கு வேலை செய்யும் நோக்கில் பலரும் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அவுட்டோரில் வீடு வாங்கி, தங்கி அங்கிருந்து டெய்லி டிராவல் செய்து வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு அத்தியாவசியமாக கார் தேவை உள்ளது. கொரோனாவுக்கு பிறகு பெரும்பாலும் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது. மேலும் அங்கு காலை மற்றும் மாலை வேளைகளில் டிராபிக் ஜாமும் அதிகமாக காணப்படும். இந்நிலையில், கார்களை ரோடு ஓரத்தில் மக்கள் பார்க்கிங் செய்து விடுகின்றனர்.
இதனால் டிராபிக் ஜாமுக்கு கூடுதல் சிரமம் ஏற்படுகின்றது. இதனால் சென்றடையும் நேரமும் மேலும் உயர்கின்றது. இதையெல்லாம் மனதில் கொண்டு ஏதாவது முடிவு எடுக்குமாறு சென்னை மாநகராட்சியை பலரும் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இதற்காக சென்னை மாநகராட்சி வரும் காலங்களில் கார் நிறுத்த பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார் புக் செய்ய முடியும் என்ற புதிய வழிமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் கார்களினால் ஏற்படும் பார்க்கிங் பிரச்சனையும் ஏதுவாக குறையும் என்று இது குறித்து டிஸ்கஸ் செய்து வருகின்றனர். இவ்வாறு மாற்றப்பட்டால் சென்னையில் பார்க்கிங் ரேட்டிற்காக மேலும் ஏரிகள், குளங்கள் ஆகியவை மூடப்படும். பெரும்பான்மையான பகுதிகள் இப்பொழுதே அப்படித்தான் உள்ளது. இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் பலரும் உள்ளனர். மேலும் இதன் மூலம் கார் பார்க்கிங் செய்ய ரேட்டிங்ஸ்சும் உயரும் என்கின்ற அச்சம் உள்ளது.