அமெரிக்கர்கள் கைது!! பிளாஸ்டிக் பாட்டில்கள் வடகொரியாவுக்கு சென்றதால் 6 பேர் மீது வழக்கு!! 

Case against 6 Americans!!
பியாங்க்யாங்: கடல் பகுதி வழியாக பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவிற்கு அனுப்பியதாக ஆறு அமெரிக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் குவாங்குவா தீவு கடற்பது பகுதியில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிளாஸ்டிக் பாட்டில்கள் கடல் நீரில் மிதந்து வந்துள்ளது. 1600 பிளாஸ்டிக் பாட்டில்கள் வடகொரியாவுக்கு சென்றதால் 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.1600 பிளாஸ்டிக் பாட்டிலில் அரிசி, பைபிள் போன்ற பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடற்கரைக்கு சென்று பார்த்த போது அமெரிக்காவை சேர்ந்த ஆறு பேர் பிளாஸ்டிக் பாட்டில்களை வடகொரியாவிற்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
சட்டத்தை மீறி பிளாஸ்டிக்களை அனுப்பியதால் ஆறு பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் கீழ்  ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் கடலோர பாதுகாப்பு போலீசார். பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தது தொடர்பாக தென்கொரியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram