ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர்களில் ஒருவர் விஜய் தேவர் கொண்டா. விஜய் தேவர் கொண்டா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் “ரெட்ரோ’ பட நிகழ்ச்சியில் விஜய் தேவர் கொண்டா கலந்து கொண்டார். அதில் பஹல்காம் தாக்குதல் பற்றி அவர் கூறியிருந்தார். அதன்படி பயங்கரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடியினர் போல் அறிவை பயன்படுத்தாமல் சண்டை போடுகிறார்கள் என்று இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
தேவர் கொண்டாவின் பேச்சு சர்ச்சைக்குரியது என கூறப்பட்டது. மேலும் தெலுங்கானா பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள எஸ் ஆர் நகர் காவல் நிலையத்தில் விஜய் தேவர் கொண்டா மீது புகார் அளித்துள்ளார். விஜய் தேவர் கொண்டா மீது தொடரப்பட்ட வழக்கில் பழங்குடியினர் குறித்து இழிவான கருத்தை பரப்பியத்தின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேவர் கொண்ட இந்த சூழலையில் பழங்குடியினர் குறித்து பேசியதற்காக வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும், அவர் வெளியிட்ட பதிவில், பழங்குடியின சமூகத்தை மிகவும் மதிக்கிறேன் என்றும் அவர்களை புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல என்றும், பழங்குடியினர் என்ற வார்த்தை வரலாற்றில் குறிப்பிட்டிருந்த நோக்கத்தில் மட்டுமே கூறினேன் என்றும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மனித குலத்தில் குழுவாக இருந்தபோது மோதலில் ஈடுபட்ட இருந்ததாக சொன்னேனே தவிர பழங்குடியினரை இழிவுபடுத்தும் நோக்கில் அல்ல என்று கூறினார்.
மேலும் இந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், நான் பேசியது யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டு இருந்தார். புகாரியின் அடிப்படையில் நடிகர் விஜய் தேவர் கொண்டா மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.