ஸ்ரீவில்லிபுத்தூர்; கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் இவருக்கு வயது 54 இவர் மக்கள் பார்வை என்ற youtube சேனல் நடத்தி வருகிறார்.
மேலும் மற்றொருவர் திவ்யா கள்ளச்சி என்ற youtube சேனலை தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா என்பவர் youtube சேனல் நடத்தி வருகிறார் .இவருக்கு வயது 30 ஆகும். மேலும் ஈரோடு கீழக்கரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவரும் கீழக்கரை கார்த்திக் என்ற youtube சேனலை நடத்தி வருகிறார்.. இவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறார்களை வைத்து ஆபாசமாக ரில்ஸ் எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகத்தில் மக்கள் பார்வை எனும் youtube சேனலில் உரிமையாளர் சித்ரா என்பவர் புகார் அளித்திருந்தார்.
மேலும் திவ்யா கள்ளச்சி தன்னுடைய வங்கிக் கணக்கை தவறாக பயன்படுத்தி இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருடி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதில் பாதிப்பு அடைந்த இரண்டு சிறுவர்களிடம் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அதில் சம்பந்தப்பட்ட திவ்யா மற்றும் கார்த்தியை விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவர்களை ஆபாசமாக ரிலீஸ் எடுத்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி திவ்யா மற்றும் கீழக்கரை கார்த்தியை ஏ டி எஸ் பி குருமூர்த்தி மற்றும் டிஎஸ்பி ராஜா மகளிர் இன்ஸ்பெக்டர் மலையரசி எடுத்து விசாரணை செய்தனர். விசாரணையில் சித்ரா சொல்லி தான் நாங்கள் வீடியோ எடுத்தோம் என்று சித்ரா மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இவர்கள் மூவரின் மீதும் போஸ்கோ உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிந்துகைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மூன்று youtubeர்களும் குற்றவாளிகள் என்று நிறுவனமானதால் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.