தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய நிலையில் இதற்கான எந்தவித பதிலையும் தெளிவாக தெரிவிக்காமல் மத்திய அரசு மாநில அரசையும் மாநில அரசு மத்திய அரசையும் என மாறி மாறி சொல்லிக் கொள்வது முறையானதா என்றும் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்.
2008 ஆம் ஆண்டின் புள்ளிவிவர சட்டத்தின்படி மாநிலங்களே அவர்களுடைய ஜாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசோ ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஒரு சில தருணங்களிலும் மற்ற சில தருணங்களில் அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு எங்களால் மேற்கொள்ளப்பட்டால் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா என்பது போல கேள்விகளை முன் வைக்கிறார்களே தவிர ஜாதி வரி கணக்கெடுப்பானது இன்று வரை ஒரு முடிவிற்கு வரவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
2008 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின் சட்டப்படி மாநிலங்களே தங்களுடைய சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் என தெரிவித்ததன் படி தற்பொழுது தெலுங்கானா ஓடிசா பீகார் போன்ற மாநிலங்கள் தங்களுடைய மாநிலத்தில் உள்ள மக்களின் சாதி வாரி கணக்கெடுப்பை முடித்து காட்டி இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளாமல் எழுத்தடிப்பதற்கான காரணம் பற்றி தெரியவில்லை என்றும் தமிழகத்தில் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.