cricket: நடைபெற்று வரும் ipl தொடரில் கடைசி லீக் போட்டியில் சதம் அடித்த ரிஷப் பண்ட். அதனை வித்தியாசமான முறையில் கொண்டாடிய நிகழ்வு தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வருடம் ipl போட்டி தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வந்த நிலையில், மற்ற ஆண்டுகள் போல் அல்லாமல் இந்த ஆண்டு எந்த அணி கோப்பையை வெல்லப்போவது என குழப்பத்தில் இருந்த நிலையில் லீக் போட்டிகள் நிறைய விளையாடாமல் இருந்த நிலையில் எந்த நான்கு அணி சுற்றுபோட்டிகு செல்லும் என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் நேற்று கடைசி லீக் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பெங்களுரு மற்றும் லக்னோ அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற பெங்களுரு அணி பவலிங் செய்ய தேர்வு செய்து களமிறங்கியது. லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் களமிறங்கிய மிட்சல் மார்ஷ் சிறப்பாக விளையாட புதிய வீரர் ப்ரட்ஸ்கீ குறைவான ரன்ங்களில் ஆட்டமிழக்க ரிஷப் பந்த் களமிறங்கினார். இவர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கினார். இதனை தொடர்ந்து மார்ஷ் மற்றும் பந்த் இணை சிறப்பாக அணிக்கு ரன் சேர்த்தனர். ரிஷப் பந்த் இறுதி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி 61 பந்துகளில் 118 ரன்கள் விளாசினார். அவர் சதத்தை பூர்த்தி செய்யும் வகையில் பல்டி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர் இந்த ஆண்டு ipl ஏலத்தில் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 227 ரன்கள் அடித்த நிலையில் பெங்களூர் அணி 19 வைத்து ஒவரில் இலக்கை அடைந்து தனது வெற்றியை பதிவு செய்தது.