மத்திய அரசு ஆர்பிஐ-க்கு அட்வைஸ்!! நகை கடன் வாங்குவதில் புது ரூல்ஸ்!!

Central Government advises RBI!!

 புதுடெல்லி:  தங்க நகை கடன் பெறுபவர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆலோசனையை மத்திய அரசு ஆர்பிஐ க்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாதங்களில் நகை கடன் பெறுபவர்களுக்கான சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தங்க நகைகள் மீதான கடன்களை வாங்குவதற்கு சரியான ஆவணங்கள் மற்றும் கடனை திரும்ப செலுத்தும் தகுதியும் இல்லாதவர்களுக்கு கடன் வழங்கி  வருவதை தடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது.

  தங்க கடன் விதிமுறைகள் அறிவித்ததில் விவசாயிகள் வருத்தம் அடைந்தனர். விதிமுறைகளை மாற்றம் செய்ய வேண்டுமென்று பலதரப்பினரும் கேட்டுக் கொண்டுள்ளனர். புதிய விதிமுறைகள் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்  இருந்தது. முதல்வன் ஸ்டாலின், நுகர்வோர் அமைப்பினர், நடுத்தர மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், நகை கடன் நிறுவனங்கள் போன்ற தரப்பிலும் கோரிக்கை விடுத்து வந்தது.

கோரிக்கையின்படி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் இருந்தன. அதன்படி எழுந்த கோரிக்கைகள் அடிப்படையாகக் கொண்டு தங்க நகை கடன் மீதான விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக ஒரு இரண்டு லட்சத்திற்கும் குறைவான நகை கடன்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

சிறு தங்க நகை கடன் பெறுபவர்களை பாதிக்காமல் இருக்க சில கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. ஜனவரி, 1 ஆம் தேதி 2026 முதல் செயல்படுத்தலாம் என்றும், புதிய விதிமுறைகளை செயல்படுத்த சிறிது காலம் வழங்கவும் மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram