மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் தமிழகத்துக்கு தர வேண்டிய நீதி அனைத்தையும் நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் கட்டாய கல்வி கொள்கைக்கான மாநில நிதியான 25 சதவீத இட ஒதுக்கீடு குறிய நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஈஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவிட்டு இருந்தார். அதில் அவர் இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இது நாளடைவில் முடக்க வாய்ப்பு உள்ளது என்றபடி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கபடப் பட்டுள்ளது. அதில் அவர்கள் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்களை நோக்கி, தமிழகத்திற்கு கட்டாய கல்வி அடிப்படையில் 25% இட ஒதுக்கீடுக்கு நிதி வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அந்த வழக்கறிஞர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகின்றது. தமிழகம் சார்பாக மத்தியில் எந்த ஒரு எம் பி யும் இல்லாத காரணத்தினால் இந்த நிதி அனுப்ப தவறப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்துள்ளார். அதற்கு அந்த நீதிபதிகள், தமிழகத்துக்குரிய தேசிய கல்விக் கொள்கைக்கு இந்த பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்திற்கான கட்டாய கல்விக்குரிய நிதி மத்திய அரசு வழங்கியாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.





