ஊதுபத்தி புகைக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து!! டெல்லி அமைச்சகத்தின் அதிரடி முடிவு!! ஆரோக்கியமா? வழிபாடா??

Central government new BIS standard for agarbatti 2025

நாம் புனிதமாக கருதும் ஊதுபத்தி புகைக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறதா? ஆம், இனி நீங்கள் வாங்கும் ஊதுபத்திகளில் சில கெமிக்கல்கள் இருந்தால் அவை சட்டப்படி குற்றம்.

எந்தெந்த கெமிக்கல்களுக்கு தடை? ஊதுபத்தி எரியும் போது வெளியாகும் புகையில் உள்ள நச்சுப்பொருட்கள் சுவாசப் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால், கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மற்றும் செயற்கை வாசனை திரவியங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது:

அலெத்ரின் (Alethrin), பெர்மெத்ரின் (Permethrin), டெல்டாமெத்ரின் (Deltamethrin) போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள்.

பென்சில் சயனைடு (Benzyl Cyanide), எத்தில் அக்ரிலேட் (Ethyl Acrylate) போன்ற செயற்கை வாசனை வேதிப்பொருட்கள்.

இந்த வேதிப்பொருட்கள் சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளன. இவை மனிதர்களின் நரம்பு மண்டலம் மற்றும் நுரையீரலைப் பாதிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய BIS 19412:2025 விதிமுறை: இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) உருவாக்கியுள்ள இந்த புதிய விதியின் கீழ், ஊதுபத்திகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

இயந்திரம் மூலம் தயாரிக்கப்படுபவை (Machine-made)

கைகளால் சுற்றப்படுபவை (Hand-made)

பாரம்பரிய மசாலா ஊதுபத்திகள் (Traditional Masala Agarbatti)

இனிமேல் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஊதுபத்திகள் இந்தத் தரக்கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றும் தயாரிப்புகளுக்கு ‘BIS Standard Mark’ வழங்கப்படும்.

மக்களுக்கு என்ன லாபம்? இந்த முடிவின் மூலம் நுகர்வோர் பாதுகாப்பான, தரமான ஊதுபத்திகளைத் தேர்ந்தெடுக்க முடியும். குறிப்பாக உட்புறக் காற்றின் தரம் (Indoor Air Quality) மேம்படும். பாரம்பரிய முறையில் இயற்கை மூலிகைகளைக் கொண்டு ஊதுபத்தி தயாரிக்கும் சிறு குறு தொழிலாளர்களுக்கு இந்த முடிவு பெரும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இனி நீங்கள் கடைக்குச் சென்று ஊதுபத்தி வாங்கும்போது, அதன் உறையில் உள்ள வேதிப்பொருட்களின் விவரம் மற்றும் BIS முத்திரை உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. மத்திய அரசின் இந்த அதிரடி மாற்றம் ஊதுபத்தித் துறையில் ஒரு பெரிய ஆரோக்கியப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram