கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வென்ற பின் வருண் சக்கரவர்த்தி ஒரு சில தகவல்களை கூறியுள்ளார்.
2025 ஆண்டுக்கான சாம்பியன் டிராபி தொடரை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதனால் 12 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இதில் ஒவ்வொரு வீரர்கள் என கூறாமல் அனைவரும் சிறப்பான பங்காற்றினார்கள் மேலும் இந்த அணியில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் வருண் சக்கரவர்த்தி. இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூன்று போட்டிகள் மட்டும் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியில் அதிக விக்கெட்களை வீழ்த்திய நபராக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் உள்ளார். இவரின் ஆட்டம் இறுதி ஆட்டம் வரை கொண்டு செல்லவும் இறுதியாட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் மிகப்பெரிய உந்துதலாக இருந்தது.
இதுகுறித்து அவர் குருகையில் நான் இங்கிலாந்து அணி உடனான டி20 தொடர் முடிந்தபின் சென்னைக்கு திரும்ப இருந்தேன். ஆனால் அதன்பின் ஒரு நாள் போட்டி தொடரில் நீ இருக்கிறாய் என கூறியதாகவும் அதன் பின் ஒரு நாள் போட்டி தொடர் முடிந்தபின் சென்னை திரும்புவதாக இருந்தபோது நீ துபாய்க்கு செல்ல இருக்கிறாய் எனக் கூறியதும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதை எதையும் நான் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றுள்ளோம் இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மக்கள் மற்றும் பலரும் என்னை பாராட்டி வருகின்றன அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.