இன்று கன மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! மாவட்டங்களில் லிஸ்ட் இதோ!! 

Chance of heavy rain today

சென்னை: வடக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மேற்கு– வடமேற்கு திசை மற்றும் மேற்குவங்கம்– வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று நகர கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 30ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காலை 10 மணி வரை நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமான மலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேனி மற்றும் நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இன்று கனமழை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் மற்றும் மேற்கு வங்கம்- வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி நகர்வதால் மகாராஷ்டிரா மற்றும் கேரள கடலோரப் பகுதிகள் அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இன்று நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram