12.30-க்கு மேல் கொண்டாட்டங்கள் நிறுத்தம்!! செங்கல்பட்டு போலீசாரின் அதிரடி புத்தாண்டு விதிகள்!! ஈ.சி.ஆரில் 564 போலீசார் குவிப்பு!!

Chengalpattu police new year celebration restrictions 2026

2026-ம் ஆண்டு பிறப்பைக் கொண்டாடும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஹோட்டல்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. விபத்தில்லா புத்தாண்டை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேரக் கட்டுப்பாடு: ஈ.சி.ஆர் (ECR), ஓ.எம்.ஆர் (OMR) மற்றும் ஜி.எஸ்.டி (GST) சாலைகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை ரோந்து: இந்த முக்கிய சாலைகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 564 போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

பட்டாசுத் தடை: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஆபத்தை விளைவிக்கும் வகையிலோ பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் குளிக்கத் தடை: திருவிடந்தை முதல் கடப்பாக்கம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்கவும், படகுகளில் கடலுக்குள் அழைத்துச் செல்லவும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கண்காணிக்கவும், அதிவேகமாகச் செல்பவர்களைத் தடுக்கவும் முக்கியச் சாலைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram