சிதம்பரம்: உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆண்டிற்கு இரண்டு முறை ஆணி தேரோட்டம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த வருடத்தின் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த எட்டு நாட்களாக பஞ்சமூர்த்தி சுவாமிகள் வெவ்வேறு வாகனங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஒன்பதாவது நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்று விமர்சியாக கொண்டாடப்பட்டது.
அலங்காரம் செய்யப்பட்டு ஐந்து தேர்களிலும் சுவாமிகள் தேரோட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் முருகப்பெருமானும், மூன்றாவது தேரில் நடராஜப் பெருமாள், நான்காவது தேரில் சிவகாமி சுந்தரி தாயாரும், ஐந்தாவது தேரில் சண்டிகேஸ்வரரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மூலவரான சிதம்பர நடராஜர் கருவறையை விட்டு வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது மகாபக்கியமாக பக்தர்களால் பார்க்கப்பட்டது. கிழக்கு கோபுர வாயில் இருந்த நிலையில் இன்று காலையில் தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி முடிந்து மீண்டும் பிறக்கிறது கோபுர வாயிலில் வந்தடைந்தது. சிதம்பர நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேரோட்டத்தை காண வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்தனர்.
ஆனி திருமஞ்சன தேரோட்டத்தின் போது தேருக்கு முன்னால் தேவாரம், திருவாசகம் பாடியபடி சிவனடியார்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். தேர்களை இழுத்து வரும் பொழுது வடம் பிடித்து தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தனர். ஆனித் திருமஞ்சன தரிசன விழா தேரோட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.