DELHI: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நாளை (24 ஆம் தேதி) நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று மாலை விமானத்தில் டெல்லி பயணம் செல்லவிருக்கிறார் மு க ஸ்டாலின்.
நிதி ஆயோக் கூட்டம் நடத்திய பின்னர் முக்கிய பிரமுகர்களை சந்தித்துப் பேச இருக்கிறார் மு க ஸ்டாலின். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை சந்தித்து தனியாக பேச ஸ்டாலின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தனியாக பேச நேரம் அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் நலன்கள் குறித்தும்,தேவைகள் குறித்தும் உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் (NITI Aayog) என்பது இந்தியாவின் அரசுத் திட்டமிடல் மற்றும் கொள்கை அமைப்பிற்கான முக்கியமான எண்ணக் குழுவாகும். இதை 1 ஜனவரி 2015 அன்று இந்திய அரசாங்கம் நிறுவியது, முந்தைய திட்டக் குழுவை (Planning Commission) மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டது.
இதன் முக்கிய நோக்கங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு நீடித்த மற்றும் விரிவான கொள்கைகளை உருவாக்குதல்,மாநிலங்களுடன் கூட்டாண்மை முறை (Cooperative Federalism) மூலம் வேலை செய்வது,துறைகள் மற்றும் மாநிலங்களுக்கு மேம்பட்ட தரவுகளும், ஆய்வுகளும் வழங்குதல், புதிய முயற்சிகளுக்கு வழிகாட்டுதல் (Innovations, Startups),தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வணிகம் மற்றும் தொழில்துறை உடன் இணைப்பு ஆகியவை கொண்டு செயல்படுகிறது.
மேலும் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு நிறைவடைந்த அன்றே தமிழ்நாடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (23/05/2025) மாலை விமானத்தில் டெல்லி பயணம் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளார் ஸ்டாலின்.