தமிழ் திரையுலகில் தெய்வத்திருமகள் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக நிலா என்ற கேரக்டருக்காக அறிமுகமாக மக்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருந்தவர் தான் சாரா அர்ஜுன். அதன்பின் பல திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து வந்திருந்தார். இவர் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி இருந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா நடிகையுடைய ஆரம்ப வாழ்க்கை கதாபாத்திரம் குறித்து நடித்து மீண்டும் மக்களை தன் பக்கம் திருப்பி இருந்தார்.
இவர் தற்சமயம் ஹிந்தி முன்னணி நடிகரான ரன்வீர் கபூருடன் துரந்தர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரஞ்சித் கபூரின் 40 ஆவது பிறந்தநாள் புகைப்படம் இணையத்தில் வைரலாகிய நிலையில் அவருடன் சாரா ஹீரோயினாக நடித்து வருவது வெளியாகி உள்ளது. இந்நிலையில் பலரும் 40 வயது ஹீரோவிற்கு 20 வயது ஹீரோயினா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சாரா அர்ஜுனோ, தனக்கு 18 வயது பூர்த்தி அடைந்த நிலையில் ஹீரோயினாக நடிப்பதையே முக்கியத்துவமாக கொண்டு நடித்து வருகிறார். வயதை காரணம் காட்டி அவரது வளர்ச்சியை முடக்க முடியாது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் இவ்வளவு சிறிய வயதில் அவர் மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்து வரும் அவரது திறமையை பாராட்டி வருகின்றனர். திரை உலகமும் இவர்களது படம் குறித்த அப்டேட்களை பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னணி நடிகர்கள் உடன் அடுத்த வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால் இந்த விஷயத்தை எல்லாம் கண்டுகொள்ள முடியாது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.