China : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சீனா தனது ராணுவ பட்ஜெட் தொகையை 7.2 சதவீதம் அதிகமாக உள்ளது.
சீனா ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. இந்த ஆண்டு சீனா ராணுவத்திற்கு 249 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது இந்திய மதிப்பின்படி 2.17 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இது இதற்கு முன் ஆண்டு ராணுவத்திற்கு ஒதுக்கிய நிதியை விட இந்த ஆண்டு 7.2% அதிகமாக ராணுவத்திற்கு சீனா ஒதுக்கி உள்ளது.
சீனா ராணுவத்திற்கு இவ்வளவு அதிகமாக நிதி ஒதுக்க காரணம் என்னவென்று யோசிக்க தேவையில்லை அதற்கு முக்கிய காரணம் தைவான் தான் தைவான் என்பது சீனாவின் ஒரு பகுதி தான் ஆனால் தைவானில் சீனாவுக்கு எதிராக சில குழுக்கள் இருக்கின்றது. அந்தக் குழுக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவி செய்து வருகிறது. நிதி உதவி செய்தது மட்டுமல்லாமல் சுதந்திர போராட்டத்திற்கு உதவி செய்வதாக அறிவித்தது இதனால் சீனாவுக்கும் இடையிலே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் இதனால் தான் இந்த பதற்றத்தை போக்குவதற்காக ராணுவத்தை பலப்படுத்தி அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது சீனா. அதற்காக போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் தய்மானுக்கு அருகே உள்ள பகுதியில் அச்சுறுத்தி வருகின்றன. இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால் அமெரிக்காவுக்கு எதிராக சீனா போருக்கு தயாராகி வருகிறது. இதனால் லடாக் விகாரம் குறித்து இந்த போர் இந்தியா பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறி வருகின்றனர்.