செயற்கை மழை!! மாசுபாட்டை குறைக்க மேக விதைப்பு நடவடிக்கை!! 

Cloud seeding activity

டெல்லி : டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க செயற்கை மழை பொழிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெல்லியில் காற்று மாசுபாடு குறைக்க செயற்கை மழையை டெல்லி அரசு முன்னெடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழைக்காக ஜூலை 4 முதல் 11ம் தேதி வரை மேக விதைப்பு நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கூறுகையில், ஜூலை 4 ஆம் தேதி மேகவிப்புக்கான வானிலை திட்டம் தொடங்க உள்ளது. ஜூலை மூன்றாம் தேதி வரை மேகவிப்புக்கான வானிலை இல்லை என்றும் தெரிவித்துள்ளது. (ஐஐடி) கான்பூர் மற்றும் பூனேயில் உள்ள தொழில் நட்ப நிறுவனம் இந்திய வானிலை ஆய்வுத் துறை இடம் சமர்ப்பித்துள்ளதாகவும் இதற்கு சுமார் 3.21 கோடி செலவாகும் மதிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேக விதைப்பு என்பது செயற்கையாக மழையை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் ஆகும். இதில் சில ரசாயனங்கள் (அதாவது சில்வர் அயோடைடு (silver iodide), சோடியம் குளோரைடு, அல்லது உலர்ந்த பனிக்கட்டி (dry ice)) மேகங்களில் விட்டு விடப்படுகின்றன. இது மேகங்களின் நீர்த்துகள்களை ஒன்று சேர வைத்து மழையாக மாற்றுகிறது.
உலர்ச்சி நிலை நிலவுகின்ற இடங்களில் மழையை ஏற்படுத்தலாம். விவசாயத்திற்குத் தேவையான நீரை வழங்கலாம். வெப்ப அலை (heat wave) நேரங்களில் வெப்பத்தை குறைக்க உதவும். மேக விதைப்பு என்பது செயற்கையாக மழையை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் ஆகும்.
மேக விதைப்பு ஒரு பயனுள்ள செயல் திட்டமாக இருந்தாலும், அது பாதுகாப்பாகவும் கட்டுப்பாடுகளோடு செய்யப்பட வேண்டும். காற்று மாசு பாடு காரணத்தால் டெல்லியில் இந்த திட்டத்தை அமல் படுத்த உள்ளது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram